Mantra Meditation Class In Tamil

ஹரே கிருஷ்ண, பகவத்கீதை ராஜ வித்யை என்று கூறப்படுகிறது அதாவது மக்களை ஆட்சி செய்யும் அரசர்களுக்கானது, அதனால் பகவத்கீதையினை தினமும் படியுங்கள், எங்களது பகவத்கீதை பயிற்சி சொற்பொழிவுகளை கேட்கவும், அகில உலக கிருஷ்ண பக்தி இயக்கத்தின் ஸ்தாபக ஆச்சாரியர் தெய்வத்திரு அ.ச.பக்திவேதாந்த சுவாமி பிரபுபாதா அவர்களின் பகவத்கீதை உண்மையுருவில் புத்தகத்தை ஆதாரமாக கொண்டது. எங்களது பகவத்கீதை பயிற்சி சொற்பொழிவுகளை டிவிடி/பெண்டிரைவ்/மெமோரி கார்ட் வடிவில் பெற்றுக்கொள்ளவும், தினமும் 2-3 மணி நேரம் சொற்பொழிவுகள் கேட்கவும். பகவத்கீதை பயிற்சி சொற்பொழிவுகள் வழங்கியவர் தவத்திரு ஜெயபதாக சுவாமி மஹாராஜ் அவர்களின் சீடர், திரு.ராமானந்த சைதன்ய சந்திர தாஸ், ஒருங்கிணைப்பாளர், “அகில உலக கிருஷ்ண பக்தி மையம்”, ஆர்.கே.பேட்டை தாலுக்கா, திருவள்ளூர் மாவட்டம் ஹரே கிருஷ்ண அனைவருக்கும் வணக்கம், ஹரே கிருஷ்ண மஹா மந்திர ஜபத்தை செய்யலாம் இது கலியுகத்தில் நமக்காக பரிந்துறைக்கப்பட்டுள்ளது அதனால் பகவான் கிருஷ்ணரது திருநாமத்தை ஜெபிப்பதால் அனைத்து தோஷங்களும் நிவர்த்தியாகும், இவ்வுலகில் பல்வேறு சாபங்களும் ஆசிர்வாதங்களும் உள்ளன. சாபங்களால் நாம் துன்பமடைகிறோம் ஆசிர்வாதங்களால் நாம் இன்பமடைகிறோம். இவ்வுலகம் இவ்வாறுதான் இயங்குகின்றது சாபங்களும், ஆசிர்வாதங்களும், ஹரே கிருஷ்ண மஹா மந்திரம் சாபங்களும், ஆசிர்வாதங்களுக்கு அப்பாற்பட்டது, இன்பதுன்பதிற்க்கு அப்பாற்பட்டது. நல்லது கெட்டதுக்கு அப்பாற்பட்டது. இதெல்லாம் ஆன்மீகமான விஷயங்கள் கலியுகத்தில் கடலைப்போன்று தோசங்கள் உள்ளன பொய், பித்தலாட்டம், ஏமாற்றுதல், போன்றவை எங்கு பார்த்தாலும் உள்ளது, மது, மாது, சூது, மாமிசம் போன்ற அனைத்து தீய செயல்களும் மக்கள் செய்து கொண்டு வருகின்றனர். இப்படிப்பட்ட சூழ்நிலையில் பகவான் கிருஷ்ணரின் திருநாமத்தை ஜெபிப்பது பரிந்துறைக்கப்பட்டுள்ளது அனைவரும் பகவான் கிருஷ்ணரின் திருநாமத்தை ஜெபிக்கலாம், இதில் இவர்கள் செய்யலாம் அவர்கள் செய்யக்கூடாது போன்ற எந்தவித பாகுபாடும் கிடையாது. கலியுகத்தில் பல்வேறு யோக முறைகளை நாம் செய்யமுடியாது, ஆனால் பக்தியோகமுறை மிக எளிமையானது, அனைவரும் செய்யலாம், ஜாதி. மதம், இனம், மொழி, பாலினம், நாடு போன்ற எவ்வித பாகுபாடும் கிடையாது அனைவரும் ஹரே கிருஷ்ண மஹா மந்திரத்தினை ஜெபிக்கலாம், இது பிரஹத் நாரதீய புராணம், கலிசந்தரண உபநிசத் போன்ற சாஸ்திரங்களில் பரிந்துறைக்கபட்டுள்ளது, நாமனைவரும் ஹரே கிருஷ்ண மஹா மந்திரத்தினை ஜெபிக்கலாம் 1 மாலை அதாவது 108 முறை ஜெபிக்கலாம், மேலும் ஆர்வமுடையவர்கள் அதிகமாகவும் ஜெபிக்கலாம் ஹரே கிருஷ்ண ஹரே கிருஷ்ண கிருஷ்ண கிருஷ்ண ஹரே ஹரே ஹரே ராம ஹரே ராம ராம ராம ஹரே ஹரே இதுவே ஹரே கிருஷ்ண மஹா மந்திரம், ஹரே கிருஷ்ண மந்திரம் ஜெபம் செய்வதற்கு முன்னால் பஞ்சதத்துவ மந்திரத்தை நாம் ஜெபம் செய்ய வேண்டும். சைதன்ய மகா பிரபு, நித்யானந்த பிரபு, ஶ்ரீ அத்வைத ஆச்சாரியர், கதாதர பண்டிதர், ஶ்ரீவாசா தாகூரர் இந்த ஐந்து நபர்களை நாம் நினைவு கூறுகிறோம் ஶ்ரீ கிருஷ்ண சைதன்ய மஹாபிரபுவே இந்த மந்திரத்தை நமக்கு கொடுத்திருக்கிறார் அதனால் அவரது பெயரை முதலில் நாம் உச்சரிக்கிறோம், அவரது ஆசிகளை நாம் பெற வேண்டும். ஜெய ஶ்ரீ கிருஷ்ண சைதன்ய பிரபு நித்யானந்த ஶ்ரீ அத்வைத கதாதர ஶ்ரீ வாசாதி கவுர பக்த விருந்த ஹரே கிருஷ்ண ஹரே கிருஷ்ண கிருஷ்ண கிருஷ்ண ஹரே ஹரே ஹரே ராம ஹரே ராம ராம ராம ஹரே ஹரே அனைவரும் ஹரே கிருஷ்ண மகா மந்திர தியானம் செய்யவும் அனைத்து விதமான நன்கொடைகள் வரவேற்க்கப்படுகின்றன
 
 

Comments

Popular posts from this blog

Ideal Family Man Book

Why Are Marital Issues Increasing in India Today?

Fundraiser for Senior Citizens' Care: Give Back to Those Who Gave Us Everything